இந்திய தொழிலாளியின் நேர்மை! துபாய் போலீஸ் பாராட்டு!!

துபாய்: இந்திய துப்புரவுத்தொழிலாளரின் நேர்மையை பாராட்டி போலீசார் பாராட்டியுள்ளனர்.

இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் வினகதர் அமானா(32).

கடந்த ஐந்து ஆண்டுகளாக துபாயில் பணியாற்றி வருகிறார். பாயின் அல் குவைஸ் என்னும் பகுதியில் துப்புரவுத் தொழில் செய்துவருகிறார்.

புத்தாண்டை முன்னிட்டு பாயின் அல் குவைஸ் பகுதியில் துப்புரவு பணி செய்துவந்தார். அப்போது ஒரு ஹேண்ட் பேக் அனாதையாக கிடந்தது.

அதில் சுமார் 10லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், ரொக்கப்பணம் இருந்தது.

அந்தப்பையை அப்படியே அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில்  ஒப்படைத்தார் வினகதர் அமானா.

போலீசார் அப்பையை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.  வங்கியில் வைத்திருந்த நகை, பணத்தை புத்தாண்டுக்கு அணிவதற்காக எடுத்துவந்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பையை பத்திரமாக ஒப்படைத்த வினகதர் அமானாவுக்கு ரொக்கப்பரிசு அளிக்க முன்வந்தனர்.

அதனை மறுத்தார் வினகதர், இருந்தபோதும் போலீசார் அவரது நேர்மையை பாராட்டி பரிசுப்பொருள், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here