ரஜினிகாந்த் மீது தினகரன் அட்டாக்!

சென்னை: அரசியல் கட்சிதுவங்க தயாராகிவரும் ரஜினிகாந்த் மீது அட்டாக் தொடங்கியுள்ளார் தினகரன்.
சென்னையில் இன்று அவரளித்த பேட்டி:


நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகம் என்று சில வார்த்தைகள் பேசி உள்ளார், ஆன்மிகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்துவது தவறாகத்தான் முடியும்.
தனி நபர் தன்னை ஒழுங்குபடுத்தி கொள்வதற்குத் தான் ஆன்மிகமே தவிர அரசியலுக்கு அது ஏற்புடையது அல்ல.


ரஜினி சிஸ்டம் சரியில்லை என்கிறார். சிஸ்டம் எப்போதுமே சரியாகத்தான் இருக்கிறது. நடைமுறைப்படுத்துவதுதான் தவறாக இருக்கும்.


ஆர்.கே.நகரில் ஸ்டாலின் வாக்குவங்கி கணக்கை நம்பியிருந்தார். அது தோல்வியில் முடிந்தது. அவர் தந்தை வேறு பல யுக்திகளை கையாண்டிருப்பார். கருணாநிதி ஒவ்வொரு தேர்தலையும் புதிதாக பார்ப்பார். ஒரு ஆசிட் டெஸ்ட் போன்று அணுகுவார். திமுக டெபாசிட் இழந்ததன் மூலம் நாங்கள் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தோம் என்று இனி கூறமுடியாது.


ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் விடியோ ஆதாரத்தை அளித்துள்ளோம்.
அதில் எம்.எல்.ஏ. வெற்றிவேல் வெளியிட்ட விடியோவின் தொடர்ச்சி உள்ளது. இவ்வாறு தினகரன் பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here