சென்னை: குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை கட்டாயமாக்க ஏன் சட்டம் கொண்டுவருவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
சிவகாசி, சித்தூர் ராஜபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் பயிற்சி மருத்துவர் ஐஸ்வர்யா.
அவர் பணியில் சேர்ந்த 4மாதங்களுக்குப்பின் பேறுகால விடுமுறை எடுத்துள்ளார்.
இதற்கிடையே மருத்துவ மேற்படிப்புக்கு அவர் விண்ணப்பித்து இடம் கிடைத்தது.
இவர் மருத்துவப்பயிற்சியை 2ஆண்டு காலம் முடிக்கவில்லை. எனவே பணியில் இருந்து ஐஸ்வர்யாவை விடுவிக்க சிவகாசி சுகாதார துணை இயக்குநர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரது சேர்க்கை ரத்து செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஐஸ்வர்யா.
இவ்வழக்கை நீதிபதி கிருபாகரன் இன்று விசாரித்தார். பேறுகால விடுப்பு குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, ஐஸ்வர்யா தற்காலிக பணியாளர் என்பதால் அந்தவிடுப்பு செல்லாது என்ற அரசின்வாதத்தை நிராகரித்தார் நீதிபதி.
ஒரு பெண்ணுக்கு பேறுகால விடுப்பு இன்றியமையாதது. அப்போதுதான் அவர் குழந்தையை சிறப்பாக வளர்க்க முடியும்.
கடந்த ஐந்தாண்டுகளில் பேறுகாலத்தில் குழந்தைகள் இறப்பது அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ளதைப்போன்று பேறுகால விடுப்பை 9மாதமாக மத்திய அரசு அங்கீகரிக்க கூடாது?
அரபுநாடுகளில் உள்ளதைப்போன்று குழந்தைகளுக்கு 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் வழங்குவதை கட்டாயமாக்க கூடாது என்பது உள்ளிட்ட 15விஷயங்களுக்கு விளக்கம் அளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஐஸ்வர்யா அடுத்த ஆண்டு மருத்துவமேற்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டு வழக்கை ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்துவைத்துள்ளார்.