புத்தாண்டு செய்திகள் குவிந்தன! வாட்ஸ்ஆப் சேவை பாதிப்பு!!

மும்பை: புத்தாண்டு வாழ்த்துச்செய்திகள் உலகம் முழுவதும் ஒரேநேரத்தில் பலமில்லியன்கள் பரிமாற நேர்ந்ததால் வாட்ஸ் ஆப் சேவை முடங்கியது.
2018ம் ஆண்டை உலகம் முழுவதும் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.


ஒருவொருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து தங்கள் அன்பை பறிமாறிக் கொண்டனர்.
ஒரேநேரத்தில் தகவல்கள் பரிமாற்றத்தால் சற்றுத்தடுமாறியது வாட்ஸ் ஆப் சேவை.
சுமார் அரைமணிநேரம் வரை அதன் சேவை பாதிக்கப்பட்டது.


இந்தியா, இங்கிலாந்து, ஜப்பான், பனாமா, தென் ஆப்பிரிக்கா, கத்தார், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மக்கள் வாட்ஸ் ஆப் சேவை பாதிக்கப்பட்ட செய்தியை பிற மெசஞ்சர்களில், டுவிட்டரில் பகிர்ந்துகொண்டனர்.

 


அதிகளவிலான பயன்பாட்டின் காரணமாகவே வாட்ஸ்ஆப் முடங்கியது என்றாலும், அந்நிறுவனம் தங்களின் தவறுக்கு மன்னிப்பு கோரியது. பின்னர் அது சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கியது.


பிளாக்பெர்ரி ஓஎஸ், பிளாக்பெர்ரி 10, விண்டோஸ் 8.0 உள்ளிட்ட இயங்குதளங்களில் வாட்ஸ்ஆப் சேவை டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here