சவுதிஅரேபியா, அமீரகத்தில் வாட்வரி அமல்!

துபாய்: சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்களில் வாட்வரி இன்றுமுதல் அமலாகி உள்ளது.


எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் முக்கியமான நாடுகள். இதுவரை அங்கு எந்த விதமான மதிப்பு உயர்வு வரிகளும் இல்லை.

இந்நிலையில் முதன்முறையாக வாட் வரி இன்று முதல் அறிமுகமாகி உள்ளது.
உணவு, ஆடைகள், மின்னணு பொருட்கள், எண்ணெய் நிலையங்கள், தொலைபேசி, நீர், மின்விநியோக கட்டணம், சொகுசு விடுதி முன்பதிவு ஆகியவற்றுக்கு 5 சதவீத வாட் வரி விதிக்கப்படுகிறது.

மருத்துவ சிகிச்சைகள், நிதி சேவைகள், பொது போக்குவரத்து போன்றவற்றிற்கு தற்சமயம் வாட் வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


முதல் ஆண்டு வாட் வரி வசூலிப்பின் மூலம் 12 பில்லியன் திர்ஹம்(3.3 பில்லியன் டாலர்) தொகைகிடைக்கும். அதனைக்கொண்டு உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டு பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here