பயங்கரவாத தடுப்புப்பணி! அமெரிக்காவுக்கு பாக். பதில்!!

இஸ்லாமாபாத்:பயங்கரவாத தடுப்புப்பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டது குறித்து விரைவில் அமெரிக்காவுக்கு பதில் அளிப்போம் என்று தெரிவித்துள்ளார் பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்.

2001ல் உலகவர்த்தகமையம் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து பயங்கரவாத ஒழிப்பு பணியில் அமெரிக்கா தீவிரம் காட்டிவருகிறது.
பல வளரும் நாடுகளுக்கு நிதியுதவி செய்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்துவருகிறது.


அவ்வாறு பாகிஸ்தானுக்கு கடந்த 15ஆண்டுகளாக ரூ.2லட்சம் கோடி வழங்கியுள்ளது.
இருப்பினும், அமெரிக்காவின் இசைக்கு பாகிஸ்தான் நடனமாட மறுக்கிறது.


இது தற்போதைய அமெரிக்க அதிபருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹபிஸ் ஷயீத் விவகாரத்தில் அமெரிக்கா ஏமாற்றத்தை சந்தித்துள்ளதாக தெரிகிறது.


எனவே, பாகிஸ்தான் தங்கள் நிதியைப்பெற்று ஏமாற்றிவருகிறது. அதன் புள்ளி விபரங்கள் போலியானவை என்று அதிபர் டிரம்ப், டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.


இதுகுறித்து விரைவில் பதில் அளிக்கப்படும். அப்போதுதான் பாகிஸ்தான் அரசு நடத்திய பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் உலகுக்கு தெரியவரும். இவ்வாறு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து  ஹபீஸ் ஷயீத்தின் அரசியல் கட்சியை பதிவு செய்ய மறுத்துவந்த பாகிஸ்தான் அரசு அதனை தடை செய்வதாகவும், அந்த அமைப்பு நிதி திரட்டுவதற்கும் தடை விதித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here