Connect with us

Tamilnadu

திராவிட அரசியலுக்கு தாக்குப்பிடிக்குமா ஆன்மிக அரசியல்?!

Published

on

சென்னை: ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் என்ற புதிய கொள்கைத்திட்டம் குறித்து ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை துவக்கி சட்டப்பேரவை தேர்தலில் 234தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.


ஆன்மிக அரசியலை முன்னெடுக்க உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்புதிய கொள்கைத்திட்டத்தை விடுதலை ஆசிரியர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஆன்மிக அரசியல் குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறுகையில்,


தமிழகத்தில் கடந்த அறுபது ஆண்டுகளாக உறைந்து கிடைக்கும் திராவிட அரசியலை ஆட்டம் காண வைக்கும் வகையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் அமைந்துள்ளது என்று நம்பலாம்.

ஆன்மிக அரசியல் என்ற கொள்கை பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு நெருக்கமாக உள்ளது.
இவ்வாறு குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.


விடுதலை ஆசிரியர் கி.வீரமணி கூறுகையில்,அரசியலையும், ஆன்மிகத்தையும் சம்மந்தப்படுத்தக் கூடாது. இது முற்றிலும் அவருடைய குழப்பத்தைக் காட்டுகிறதே தவிர, வேறொன்றுமில்லை. அவருடைய ஆன்மிக அரசியலை அவர் தெளிவுபடுத்தட்டும்.


தமிழ்நாடு, பகுத்தறிவு பூமி, பெரியார் பூமி; இந்தப் பகுத்தறிவின் வேரை வெட்டுவதற்கு எந்த சக்திகள் முனைந்தாலும், அதை தடுப்பது எங்களது பணியாக இருக்கும். இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator