ரசிகர்கள் ஒருங்கிணைப்பு பணி! ரஜினிகாந்த் சுறுசுறுப்பு!!

சென்னை:நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முன்பாக தனது ரசிகர்கள், பொதுமக்களை ஒரே குடையின்கீழ் கொண்டுவர திட்டமிட்டுள்ளார். அதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் அரசியல்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிடுவதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


அதனைத்தொடர்ந்து இன்று ரஜினிமன்றம் என்ற வெப்சைட் துவக்கியுள்ளார்.
அதில் அவர் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியிருப்பதாவது:


எனது அரசியல் பிரவேசத்தை வரவேற்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத ரசிகர் மன்ற உறுப்பினர்கள், தங்கள் மன்றத்தின் விபரங்களுடனும் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும், தங்களின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், இவை இரண்டையும் RAJINI MANDRAM என்ற பெயரில் உள்ள ஆண்ட்ராய்டு இணையதள செயலியிலோ அல்லது WWW.RAJINIMANDRAM.ORG என்ற வலைதள பக்கத்திலோ பதிவு செய்து மன்றத்தின் உறுப்பினர் ஆகலாம்.


நாம் அனைவரும் சேர்ந்து தமிழ்நாட்டில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குவோம்.
நன்றி. இவ்வாறு ரஜினி பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here