முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம்! பாஜக எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!!

ராஜஸ்தான்: முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் பாஜக எம்.எல்.ஏ. பன்வாரிலால் சிங்கால்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் தொகுதி எம்.எல்.ஏ. பன்வாரிலால் சிங்கால் முகநூலில் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.

அதில் நாட்டின் மக்கள் தொகை குறித்து புதிய சட்டம் இயற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்துக்கள் 2 குழந்தைகளுடன் போதும் என்று நிறுத்திவிடுகிறார்கள். அக்குழந்தைகளில் கல்வி, வாழ்க்கைத்தரம் குறித்து கவலைப்படுகிறார்கள்.

ஆனால், முஸ்லிம் மக்கள் அப்படியில்லை. 10, 12 குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர். இதனால் இந்துக்கள் செலுத்தும் வரிப்பணமும் வீணாகிறது.

அவர்கள் இந்துக்களை விடவும் அதிக எண்ணிக்கையுள்ள மக்களாக இந்தியாவில் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அவர்கள் இந்தியாவின் அதிபர், பிரதமர், முதல்வர் ஆகியோர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

இந்நிலை தொடர்ந்தால் 2030க்குள் இந்தியாவில் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாகி விடும்.

அதன்பின் இந்துக்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவார்கள்.   இதுகுறித்து அரசு இப்போதே விழித்துக்கொள்வதே நல்லது.

இந்துக்கள், முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் சட்டத்தை உடனே கொண்டுவர வேண்டும். இவ்வாறு பன்வாரிலாலின் முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here