Connect with us

International

அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை!

Published

on

வடகொரியா: அமெரிக்காவின் எந்த ஒரு இடத்தையும் அணு ஆயுதத்தால் தாக்குவதற்கு தயாராக உள்ளது வடகொரியா.
அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன் தனது புத்தாண்டு உரையில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கைவிடுத்தார்.

அணுஆயுத சோதனைகளை வடகொரியா முழுமையாக முடித்துவிட்டது. அணுஆயுதங்களை இயக்குவதற்கான சுவிட்ச் என்னுடைய மேஜையின் மீது தயார் நிலையில் உள்ளது.


வடகொரியாவின் அணுசக்தி படைகள் அமெரிக்காவிடமிருந்து நாட்டைக் காக்கும் சக்தி வாய்ந்த பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தியுள்ளன.
வடகொரியாவின் அணுஆயுதங்கள் அமெரிக்காவின் முக்கிய இடங்களை தாக்கும் திறன் படைத்தவை.

வடகொரியாவின் சுதந்திரம், நீதியை எந்த நாட்டு சக்தியும் தடுத்துவிட முடியாது.
நாட்டின் சுய பாதுகாப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் அணுசக்தி திட்டங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.

அணுஆயுதங்களை கையாள்வதில் பொறுப்புணர்வோடு செயல்படுவோம் இவ்வாறு அதிபர் கிம்ஜோங் புத்தாண்டு உரையில் தெரிவித்தார்.

அந்நாட்டின் கண்டம்விட்டு கண்டம் தாக்கும் அணு ஆயுதம் ஏந்திய வசாங் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
அந்த ஏவுகணையின் படம்பொறித்த அஞ்சல்தலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator