கழிவறை கட்டிக்காண்பித்து சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகை!!

காஞ்சிபுரம்: சுகாதாரத்தின் அவசியமாக கழிப்பிடங்கள் தேவை என்பதை வலியுறுத்திய நடிகை த்ரிஷா கழிவறையை கட்டும்பணியை செய்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் நட்சத்திர தூதர் அந்தஸ்து சமீபத்தில் த்ரிஷாவுக்கு கிடைத்தது.


குழந்தைகள் குறித்த அவரது அக்கறையால் இப்பதவிக்கு அவர் தேர்வானார்.
குழந்தைகள், உடல்நலம், சுகாதாரம் குறித்து அவர் ஐ.நா.திட்டங்களை விளம்பரப்படுத்துவார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் வடநெமிலி கிராமத்துக்கு அவர் சென்றார்.


அங்கு சுகாதாரமாக இருக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களிடையே பேசினார்.
கழிவறைகளின் முக்கியத்துவம், கழிவறை இல்லாததால் ஏற்படும் சுகாதாரக்கேடு, கழிவறைகளை அமைப்பது எப்படி என்று விளக்கினார். ஒரு கழிப்பறையை அவரே கட்டிக்காண்பித்தார்.


பின்னர் அதிகாரிகளுடன் த்ரிஷா ஆலோசனை நடத்தினார். அக்கிராமத்துக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க உதவுவேன் என்று மக்களிடம் த்ரிஷா உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here